Infinite Thought

நானும் என் செல்ல பிராணியும் ..

Posted on: மே 23, 2010

நா ஸ்கூல் படிக்கும் போது, அப்பா அம்மா கிட்ட அடம் புடிச்சி ரெண்டு அல்லது மூன்று ரூபாயோ  வாங்கிட்டு போய் கலர் பிஷ் வாங்குவன்.. அதுவும் குறிப்பா ரிப்பன் டைல், ப்ளாக்கி, சில்வர் மீன் ( என் நா அது தான் சீகரம குட்டி போடும் ) வாங்கி அத ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில்ல போட்டு வச்சிருந்தன்…  தினமும் காலை எழுந்தவுடன் நேர போய் அந்த மீன் குட்டி போட்டு இருக்கானு பாப்பான்.. இதுல friends கூட போட்டி.. யார் மீன் முதல குட்டி போடுதுன்னு..


கொஞ்சம் பெரிய பையன் ஆனா பிறகு … மீன் மேல இருந்த மோகம் போய் நாய் குட்டி மேல் ஆர்வம் … முதல் முதல நா வளர்த்த போமேரனியன் நாய் குட்டி பேறு chella ..பிறந்தநாள் 5/2/2003  ரொம்ப புத்திசாலி … அதுகூட நா இருந்த நாட்கள் என்னால மாறாக முடியாது .. நாய் குட்டி செய்த சில குறும்புகள் என் தம்பியோட புக்ஸ் எடுத்துட்டு போய் அலமாரி அடில வச்சிடும் , அடுத்து அவ பால் குடிக்கிற கிண்ணத எடுத்துட்டு போய்  எங்க அம்மா பாத்திரம் கழுவும் போது கிட்ட போய் கீழ போட்டுட்டு கூலசிது  … எல்லாரும் அசந்துடோம் … எனக்கு பத்தாவது பறிச்ச வர சமயம் நா படிக்காம அது கூட விளயாட்ரனு என் அப்பா நா ஸ்கூல் போன நேரத்துல அத எடுத்துட்டு போய் என் அப்பா   பெரியப்பா வீட்ல விட்டுட்டாரு … ரொம்ப அழுதன்.. என் சந்தோசம் போச்சு.. பயங்கரமா என் அம்மா கிட்ட சண்ட போடன் … கொஞ்ச நாள் சாப்டாம இருந்தான் … பத்தாவது பறிச்ச முடிஞ்சிது … அடுத்த நாளே என் பெரியப்பா வீட்டுக்கு கெளம்பின… பஸ்ல போகும் போது chella
என்ன மறந்துட்டு இருக்கும்னு நனச்சன்.. ஆனா என்ன பாத உடனே .. chella ஓடிவந்து என் கால சுத்தி சுத்தி வந்துது .. மேல தாவிச்சி.. எனக்கு எதையோ சாதிச்ச ஒரு சந்தோசம் ..  அந்த நாள் என் வாழ்கைல மறக்க முடியாத ஒரு நாள்..

அதுக்கு அப்பறம் என் அப்பா சொன்னாரு .. நீ பிளஸ் டு எக்ஸாம் முடிச்ச உடனே நா உனக்கு வேற நாய் குட்டி வாங்கிதரனு சொன்னாரு … அதே மாதிரி ஒரு லாப்ரடார் நாய் குட்டி வாங்கின … பேறு jack … ரொம்ப சந்தோஷமான நாட்கள்… சில மாதங்களுக்கு பிறகு என் அம்மாக்கு உடம்பு சரி இல்லாதுனால jack ஹ கவனிக்க முடியல .. நானும் காலேஜ் போறதுனால என்னால சரியாய் கவனிக்க முடியல … ஒரு கட்டத்துல chella மாதிரியே jack எங்கள விட்டு பிரியரதுகான சூழ்நிலை எங்க வீட்ல வந்துச்சி .. நானும் என் அம்மா கிட்ட எவளோ பேசி பாத்தன்..  என் அம்மா ஒரே வார்த்தை சொன்னாக ” உனக்கு நா முக்கியமா இல்ல jack முக்கியமான்னு கேட்டாங்க” … என்னால பதில் சொல்ல முடியல … என் அப்பா வோட நண்பர் அந்த நேரம் பார்த்து வந்து நாய் குட்டி நா எடுது போறன்னு சொன்னாரு … என் அப்பாவும் அம்மாவோட உடம்பு தான் முக்கியம்னு சொன்னாரு … என்னால மறுக்க முடியல … என் கையாள jack  ஹ தூக்கி கொடுத்துட்டேன் … கண்ணுல இருந்து தண்ணி வந்துரிச்சி … என்னால கட்டுபடுத்த முடியல.. அந்த நேரம் பேசும் போது என் வாய் கொலருசி … என் கஷ்டத்தை வீட்ல யார் கிட்டயும் சொல்ல முடியல …

இந்த பதிவுக்கு காரணம் என் தம்பி .. கடந்த செவ்வாய்கிழமை எங்க வீடு மாடில அணில் கத்தர சத்தம் கேட்டுது போய் பார்த்தோம் அணில் மூன்று குட்டி இருந்துது   அதுல ரெண்டு இறந்து கிடந்தது .. உயிருடன் இருந்த அந்த அணில் குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து என் தம்பி அதுக்குனு ஒரு அட்டை பெட்டி செஞ்சி, பால்ல பஞ்ச நெனச்சி அது வாய்ல வச்சி சாப்ட வச்சான், நல்ல பால் குடிச்சித்து … நல்ல இருந்தது  … நேத்து இரவு பால் கொடுபதற்கு பெட்டிய திறந்து பார்த்துட்டு அம்மா கத்துன என்னனு போய் பார்த்த அந்த அணில் இறந்து விட்டது.. ரொம்ப அழுதான் என் தம்பி … அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதனம் செய்ய முடியல …

என்னோட வேண்டுகோள்
1.ஒரு செல்ல பிராணி வாங்கும் போது வீட்டில் உள்ள அனைவரிடம் ஆலோசித்து வாங்குங்கள்.
2.அந்த செல்ல பிராணியை பிரிந்து உங்களால் இருக்க முடிமா என்று யோசயுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

The next version of Ubuntu is coming soon

பிரிவுகள்

The next version of Ubuntu is coming soon
மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

What’s happening

Flickr Photos

Advertisements
%d bloggers like this: